பல்சுவை உணவகம்

Blogger Widgets

12 நவம்பர், 2013

உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலை :

 உலகபாரம்பரிய பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலை :

வணக்கம் அன்பர்களே:

ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது.

இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.


தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை.

நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது.

இந்த மலைத் தொடரை ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய உலகப் பாரம்பரிய இடங்கள் குறித்து ஆராயும் குழு, உலகப் பாரம்பரிய மலைத் தொடராக தேர்வு செய்துள்ளது

இது அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்காற்றை மறைத்து, மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு நல்ல மழைப் பொழிவைத் தருகிறது.

இம்மலைத் தொடரில், அகத்தியர், பெரியார், ஆனைமலை, தலைக்காவிரி, நீலகிரி,குதிரைமுக், சயாத்ரி மலை ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன.

எனதுfacebook  நண்பர் ஒருவர் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் அதை உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

நன்றி....  
http://nikhiraagam.blogspot.in/2013/11/blog-post_12.html
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner