பல்சுவை உணவகம்

Blogger Widgets

18 அக்டோபர், 2012

சுயமதிப்பிடு தேவை

nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_7774.html










ுக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை மற்றவர்களிடமிருந்து கேட்கும் போது வியப்பாய் இருக்கும். சுயமதிப்பீடு இல்லாத போது இத்தகைய சிரமங்கள் ஏற்படக் கூடும். உங்களை நீங்களே உணர்ந்து கொள்வது மிக முக்கியம். அப்போதுதான் புகழையும் விமர்சனங்களையும் சரியாக எடைபோட்டுத் தேவையானதை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். அடுத்தவர்கள் உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்குப் பெயர் அடக்கமல்ல. அபத்தம்.

எதிர்காலம் பற்றிய கனவுகளும் திட்டங்களும் தேவைதான். ஆனால் எதிர்காலம் எங்கே தொடங்குகிறது தெரியுமா?

இதோ இந்த நிமிடத்தில் தொடங்குகிறது. இப்போது நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதன் பயனைத்தான் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகிறீர்கள்.

நிகழ்காலத்தில் நீங்கள் நிகழ்த்துவதுதான் எதிர் காலமாய் முதிர்கிறது. “செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன் – முடியவில்லை” இதுதான் தங்கள் இலட்சியங்களை விட்டுத் தள்ளி வந்தவர்கள் வருந்திச் சொல்கிற வாக்குமூலம். எனவே நிகழ்காலத்திலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்காலம்.

சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே வாழ்வை ரசிப்பதற்கான காரணங்களை யாரெல்லாம் கண்டுணர்கிறார்களோ, அவர்களின் உறவும் உற்ற துணையும் வாழ்வெல்லாம் உடன் வருமாறு உறுதி செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை பற்றிய வருத்தமும் விரக்தியும் எங்கும் பரவச் செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. இதை உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சமாகக் கைக்கொள்ளுங்கள்.

உங்கள் சக்தியும் நேரமும் பெருமளவில் பறிபோவது, வேண்டாத விவாதங்களில்தான். ஒபாமாவின் வெற்றியில் தொடங்கி, உள்ளூர் வெட்டுகுத்து வரை எல்லாவற்றிலும் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல் சிலர் தப்புத்தப்பான தகவல்களைத் தந்து கொண்டிருக்கக்கூடும். அவர்களை மறுத்துப் பேசி உங்களுக்கு யாரும் மகுடம் சூட்டப் போவதில்லை. அத்தகைய விவாதங்களையும், விவாதம் செய்பவர்களையும் தவிர்த்துவிடுங்கள்.

முன்முடிவுகள், உறவின் பாதையில் முட்களாகக் குத்தும். அவை பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். மற்றவர்களின் உண்மையான இயல்புகளைக் காணவும் விடாமல் கண்களைக் கட்டுபவை முன்முடிவுகள். அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். சகமனிதர்களை எடைபோட்டு, இவர்கள் இப்படித்தான் என்று தீர்மானங்கள் செய்யும் முன்னே நடுநிலையோடு பாருங்கள். யாரிடமும் நல்லதைத் தேடுங்கள். உறவுகள் மிக விரைவாய் மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள்.

ஏற்கனவே என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அவற்றிலிருந்து மேலும் தெரிந்து கொள்ள முயலுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாய் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உங்களால் முடியும் என்பதை உணர்வீர்கள். வளர்வதற்குப் பெயர்தான் வாழ்க்கை. புதிதுபுதிதாய் கற்றுக் கொள்ள உங்கள் தயக்கமோ உங்களைப் பற்றிய தவறான உங்கள் மதிப்பீடுகளோ தடையாய் இருக்க அனுமதிக்காதீர்கள்.

வாழ்க்கை மனிதர்களால் ஆனது. கடமைகள், அலுவல்கள் அனைத்துமே சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தோஷத்துக்கான பாதைகள். அதை வாழ்வின் எல்லா நேரங்களிலும் நினைவில் வைத்திருங்கள். உயர்ந்த விதிகளை உருவாக்கும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. அது உயர்ந்ததாகவும் உபயோகமானதாகவும் இருந்தால் உலகமே உங்களை உற்சாத்தோடு பின்பற்றும்.

நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா



நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா

டெங்கு வின் அறிகுறிகள்



அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும், என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பகல் நேர கொசுக்கடியே காரணம்:
ஏடிஸ் (Aedes) எனப்படும் கொசு கடிப்பதனாலே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கொசு நன்னீரில்தான் உயிர்வாழும். பகல் நேரத்தில் மட்டுமே இவை கடிக்கும் என்கின்றனர். மருத்துவத்துறையினர்.

இந்த அறிகுறி எல்லாம் இருக்கா?:
சாதாரண காய்ச்சல் போல தொடங்கினாலும் கண்வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும். வயிற்றுவலியும் தொடர் வாந்தியும் இருக்கும்.


உடலில் அரிப்பு இருக்கா?
தசைகளில் வலி படிப்படியாக ஏற்பட்டு அதிகரிக்கும். சருமத்தில் அரிப்பு ஏற்படும். கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள் தோன்றும். மூக்கில் ரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும்.


ரத்தத் தட்டு குறைந்தால் டெங்குதான்:
டெங்கு காய்ச்சல் என்பது அச்சம் ஏற்பட்டால் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் எடுத்துப் பார்ப்பார்கள். ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து உறுதி செய்யலாம். ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் பட்சத்தில் தாக்கியிருப்பது டெங்கு காய்ச்சல்தான் என்று உறுதி செய்யலாம்.


ரத்தம் கசிந்தால் எச்சரிக்கை:
டெங்கு காய்ச்சலின் அடுத்த அறிகுறி ரத்தம் கசிவது. ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தம் உறைதல் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மூக்கில் இருந்தோ உடம்பில் அரிக்கும் இடங்களில் இருந்தோ ரத்தம் கசியலாம். குளுக்கோஸ் ஏற்றும் இடத்தில் இருந்தோ, மலம் கழிக்கும் போதே ரத்தம் வெளியேறும். இதுதான் அபாயகட்டம் என்கின்றனர் மருத்துவர்கள்.


தயவு செய்து ஆஸ்பிரின் சாப்பிடாதீங்க:
சாதாரண காய்ச்சல் என்று நினைத்து பாராசிட்டமால் கொடுப்பார்கள். ஆனால் எந்த காரணம் கொண்டும் டெங்கு பாதித்தவர்களுக்கு ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை கொடுக்கக் கூடாது. ஏனெனில் இது ரத்தத்திட்டுகளை குறையச்செய்து ரத்தக்கசிவினை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை


டாக்டரிடம் கேட்டே மருந்து சாப்பிடுங்கள்:
டெங்கு அறிகுறி ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தனி அறையில் வைத்து நோயாளியின் தன்மையை அடிக்கடி கண்காணிக்கவேண்டும்.


நிறைய ஜூஸ் சாப்பிட வேண்டும்:
டெங்கு பாதித்தவர்களுக்கு உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விடும். உடம்பில் நீர்ச்சத்தினை தக்கவைக்கவே குளுக்கோஸ் ஏற்றுக்கின்றனர். அவ்வப்போது ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பார்கள். அதை கண்டிப்பாக குடிக்கவேண்டும். பின்னர் எந்த அளவிற்கு நம்முடைய உடம்பில் இருந்து நீர் வெளியேறுகிறது என்று கண்காணிக்கின்றனர். நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்:
மனித உடம்பில் உள்ள ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருக்கவேண்டும். படிப்படியாக குறைந்து வரும் பட்சத்தில் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும். ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 15,000 வரை குறைந்து ஆபத்தில் இருந்து மீண்டவர்கள் கூட இருக்கின்றனர். படிப்படியாக குறைந்த ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை சிகிச்சையைப் பொருத்து அதிகரிக்கும்.

ரத்தம் ஏற்றலாம்:
ரத்தக்கசிவு ஏற்படும் வரை டெங்கு பற்றி அச்சம் கொள்ளத்தேவையில்லை. எனவே ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பின் ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரத்தம் ஏற்றுவார்கள்.


நல்ல ரெஸ்ட் தேவை:
டெங்கு பாதித்தவர்களுக்கு நல்ல ஓய்வு அவசியம். நீர்சத்துள்ள உணவுகளை அதிகம் கொடுக்கவேண்டும். இதன் மூலம் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்க முடியும். எந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்கிறோமோ அதே அளவிற்கு சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.

மூலிகை டீ கொடுக்கலாம்:
பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் குடிக்க கொடுக்கலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் பிஸ்கெட் தொட்டு சாப்பிடக் கொடுக்கலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.


கொசு கடிக்காம பாத்துக்கங்க:
இது பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். ஆனால் டெங்கு பாதித்தவர்களை கடித்த கொசு மற்றவர்களை கடிக்கும் பட்சத்தில் அவர்களையும் டெங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வந்த பின் அவஸ்தைப்படுவதை விட வருமுன் காப்பதே நல்லது.


வீட்டைச் சுற்றி தண்ணீ தேங்க விடாதீங்க:
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தற்போது தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருக்கும். மழைநீரில்தான் இந்த கொசு உயிர்வாழும் என்பதால் வீட்டைச்சுற்றிலும் தண்ணீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடியுங்கள். கொசு கடிக்காத வகையில் வலையை உபயோகியுங்கள். உடம்பை மூடிய உடைகளையே அணியுங்கள்.


சரியான சிகிச்சை அவசியம்:
டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களை கவனிக்காமல் விடுவதனால்தான் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே வந்த பின் டெங்கு வந்தபின் அவஸ்தைப் படுவதை விட வரும்முன் தடுப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_3499.html

மைசூர் அரண்மனை



மைசூர் அரண்மனை வயது 100

இந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம், மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனைதான்.

மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. மைசூர் யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக் கூறும் மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது.

பதினைந்து ஆண்டு கால மனித உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய்.

உடையார் மன்னர்களின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த அரண்மனையை மேற்பார்வை பார்த்து கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அரசி கெம்ப நஞ்சம்ணி வாணிவிலாச சன்னிதானா ஆவர்.

1399-ஆம் ஆண்டில் யதுவம்சத்தை சேர்ந்த யதுராயா மன்னரால் மைசூர் ராஜ்யம் உருவாயிற்று. உடையார் மன்னர்கள் வழிவந்த சாமராஜ உடையாரின் மகள் தேவராஜ அம்மணி, யதுராயா மன்னரைத் திருமணம் செய்து மைசூரில் குடிபுகுந்தார்.

யதுராயா மன்னர்கள் காலத்திலேயே நிறுவப்பட்ட மைசூர் அரண்மனை, ரணதீரா கண்டீரவா நாகராஜ உடையார் ஆட்சிக் காலத்தில் மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமடைந்ததால் புதிய அரண்மனை கட்டப்பட்டது.

உண்மையிலேயே அவர் புதிதாக ஓர் அரண்மனையைக் கட்டினாரா அல்லது பழைய அரண்மனையையே சீரமைத்தாரா என்பது குறித்து சரியான தகவல் இல்லை.

1760-ம் ஆண்டு மன்னராக இருந்த கிருஷ்ணராஜ உடையார் இந்த அரண்மனையைப் பராமரிப்புக்காக ஹைதர் அலியிடம் ஒப்படைத்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1793-ம் ஆண்டு ஹைதர் அலி இறந்தவுடன் மைசூர் மன்னர்களை தோற்கடித்த திப்பு சுல்தான் அப்பகுதியில் சுல்தானாக ஆட்சி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் மரணத்திற்குப் பின்னர் ஐந்து வயதான கிருஷ்ணராஜ உடையாருக்கு நசர்பாத் அருகில் பந்தல் அமைக்கப்பட்டு முடிசூட்டு விழா நடந்ததாக 1799-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கர்னல் வெல்லஸ்லி அவரது சகோதரர் எர்ல் ஆஃப் மோர்னிங்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாபெரும் அரண்மனைக்கு பின்னால் ஒரு சோகமான கதை உண்டு. 1867-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி இளவரசி ஜெயலட்சுமி அம்மணிக்கும் சர்தார் காந்தராஜ் அர்ஸþக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழைய அரண்மனையில் நடந்த இந்த விழாவில் உற்சாகமும் கலகலப்பும் குடிகொண்டிருந்தது. அன்று மாலை அந்த பழைய அரண்மனை தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. நூற்றுக்கணக்கில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த விளக்குகள் தவறி விழுந்து தீப்பிடித்து எரிந்ததாகவும், திருமண நிகழ்ச்சியின்போது நடத்திய ஹோமம் காரணமாக தீப்பற்றியதாகவும் காரணங்கள் கூறப்பட்டன.

அருகில் இருந்த தொட்டகரே ஏரியிலிருந்து பொதுமக்கள் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பெங்களூரில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் அரண்மனை முழுவதுமாக எரிந்து சாம்பலாயிற்று.

அரண்மனை தீப்பிடித்து எரிந்து முடிவதற்குள் நகைகள், தங்கம், வெள்ளிப் பொருள்கள், புத்தகங்கள், ராஜமகுடம், ஆயுதங்கள் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருள்களனைத்தையும் முடிந்தவரை அரண்மனை ஊழியர்கள் கொண்டு வந்து அரண்மனை முன்புள்ள மைதானத்தில் குவித்தனர். இதை கண்டு மனம் தளராத அரசி, அதே இடத்தில் புதிய அரண்மனையைக் கட்டுவதென தீர்மானித்தார்.

புதிய அரண்மனை கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வரைபடங்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றில் சிம்லாவில் உள்ள வைஸ்ராய் மாளிகையை வடிவமைத்த ஆர்கிடெக் இர்வின் தயாரித்த பிளான் அரசிக்கு மிகவும் பிடித்திருந்தது.

முந்தைய அரண்மனை தீப்பற்றி எரிந்த அனுபவத்தின் காரணமாக, அரண்மனை எளிதில் தீப்பிடிக்க முடியாத அளவில் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டன. அரண்மனை முழுவதுமாக கட்டி முடித்தவுடன் 1932-ம் ஆண்டில் சில சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டன. அதனால் இப்போதைய அரண்மனையின் அழகு இருமடங்காயிற்று.

பார்த்தவுடன் இப்படியும் ஒரு கம்பீரமான கலைநயம் மிக்க அரண்மனையா? என்று வியக்க வைத்தது.
இந்திய-சராசெனிக் நாகரீகத்தை பிரதிபலிக்கும் வகையிலும், ஹொய்சலா மற்றும் கிரேக்க சிற்ப சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தும் அரண்மனை வடிவமைக்கப்பட்டது. இந்த மூன்று மாடி அரண்மனையைக் கட்ட பெருமளவில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

மூன்றாவது மாடிக்கு மேல் அமைந்துள்ள கோபுரங்கள் நான்காவது ஐந்தாவது மாடிகளாக கருதப்பட்டன. கோபுரங்கள் மீது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.

கல்யாண மண்டபம், இரண்டு தர்பார் ஹால், இசை மேடை, பொம்மைகள் கண்காட்சி அறை, வைரங்கள் பதித்த அரசரின் மணி மகுடம் வைக்க தனி அறை, கோவில்கள் என அனைத்தும் இங்கு உள்ளன. அரண்மனை முழுக்க கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்கள், சிற்பங்கள், திரைகள் நிறைந்துள்ளன.

உள்ளூர் கட்டுமானப் பொருள்களையே பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தாலும் ஜெய்ப்பூர் இத்தாலியிலிருந்தும் கிரானைட் கற்கள் வரவழைக்கப்பட்டன.

nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_18.html

17 அக்டோபர், 2012

சிவந்த பழங்களின் நன்மைகள்



காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் சிவப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் நன்மைகளைப் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோய்கள் சரியாகும் என்று நினைக்க வேண்டாம். சிவப்பு நிறக் காய்கறி மற்றும் பழங்களிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் தற்போது நிறைய பேர், உடல் ஆரோக்க
ியமாக இருப்பதற்காக உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். மேலும் எந்த நேரத்தில் எந்த காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியலையே பின்பற்றி வருகின்றனர்.

அத்தகையவர்கள் ஒருசில சிறந்த உணவுகளான சிவப்பு நிற காய்கறி மற்றும் பழங்களின் முக்கியத்துவத்தை மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக தக்காளி ஒரு சிவப்பு நிற ஆரோக்கிய உணவுப் பொருள்களுள் ஒன்று. இந்த தக்காளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற மற்ற சிவப்பு நிற உணவுகளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்கள் கட்டுப்படுவதுடன், உடல் நன்கு பலத்துடன் இருக்கும். இப்போது அந்த சிவப்பு நிற உணவுப் பொருட்களில், எந்த காய் மற்றும் பழங்களைச் சாப்பிட்டால், எந்த நோய் சரியாகும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதிலும் இவை இதயத்திற்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இவற்றை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்துவிடும்.

தக்காளி

காய்கறிகளில் ஒன்றான தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இவை உடல் எடையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள பீட்டா கரோட்டீன் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மையுடையது.

தர்பூசணி

தினமும் தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


மாதுளை

அனைவருக்குமே மாதுளை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும் என்று நன்கு தெரியும். அதிலும் இந்த பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

குருதிநெல்லி

சிவப்பு உணவுப் பொருட்களில் ஒன்றான குருதிநெல்லியில் அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் கே நிறைந்துள்ளன.

ஆப்பிள்

ஆப்பிளில் அதிக அளவில் ப்ளேவனாய்டு இருப்பதால், அவை உடலில் ஏற்படும் செல் அழிவைத் தடுத்துவிடும். மேலும் இவற்றை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும் வலுவைக் கொண்டது.

ராஸ்பெர்ரி

இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, பார்வை குறைபாடும் நீங்கும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியத்தோடு இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இதனை டயட்டில் சேர்த்துக் கொண்டால், உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலிகள், கீழ்வாதம் மற்றும் இதய நோய் போன்றவற்றை சரிசெய்துவிடும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, குடலியக்கமும் நன்கு இயங்கும்.

செர்ரி

செர்ரியில் உடல் வலியை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், தூக்கமின்மை சரியாகும். அதிலும் இந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_17.html

15 அக்டோபர், 2012

ஆதித்யா பாருங்க



இந்த பாட்டுல என்ன தான் புரியுதோ தெரியல ஆனா இத போட்ட வுடனே
aadithya paarungaஎன் 10 மாசத்து பொண்ணு என்ன ஆட்டம் அய்யோ ,தூங்கிட்டு இருந்த பொண்ணு எழுந்து ஆட்டம் போடுது 

14 அக்டோபர், 2012

நான் படித்தது 4





டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது. டெங்குவால் பாதிப்பு எதுவும் இல்லை என்னும் பல்லவியைத்தான் அமைச்சர்களும் பாடுகின்றனர்.
டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி, பலர்
இறந்துள்ள காரணத்தால் மத்திய அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரே தமிழகத்துக்கு வந்து அக்கறை காட்டிச் சென்றுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் மீது எடுக்கப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிமுக அரசின் பழிவாங்கும் செயலுக்குப் பெரிய அடியாகும் இது.
மக்கள் நலப் பணியாளர்களைப் பழிவாங்குவதே தங்களுடைய லட்சியம் என்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இது நல்லதல்ல.
திமுக ஆட்சியின்போது மின்வெட்டு பற்றி ஒன்றிரண்டு செய்தி வரும்போதெல்லாம் தோள்
தட்டிக் கோபமாகப் பேசியவர் இப்போதைய மின்சாரத் துறை அமைச்சர். இப்போது மின்சாரக் குறைபாட்டைப் பற்றி பேசாமல் திரை போட்டுக்கொண்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார் கருணாநிதி.
Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner