பல்சுவை உணவகம்

Blogger Widgets

17 அக்டோபர், 2012

சிவந்த பழங்களின் நன்மைகள்



காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் சிவப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் நன்மைகளைப் பற்றி யாருக்கும் அவ்வளவு தெரியாது. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோய்கள் சரியாகும் என்று நினைக்க வேண்டாம். சிவப்பு நிறக் காய்கறி மற்றும் பழங்களிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் தற்போது நிறைய பேர், உடல் ஆரோக்க
ியமாக இருப்பதற்காக உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். மேலும் எந்த நேரத்தில் எந்த காய் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியலையே பின்பற்றி வருகின்றனர்.

அத்தகையவர்கள் ஒருசில சிறந்த உணவுகளான சிவப்பு நிற காய்கறி மற்றும் பழங்களின் முக்கியத்துவத்தை மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணமாக தக்காளி ஒரு சிவப்பு நிற ஆரோக்கிய உணவுப் பொருள்களுள் ஒன்று. இந்த தக்காளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற மற்ற சிவப்பு நிற உணவுகளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்கள் கட்டுப்படுவதுடன், உடல் நன்கு பலத்துடன் இருக்கும். இப்போது அந்த சிவப்பு நிற உணவுப் பொருட்களில், எந்த காய் மற்றும் பழங்களைச் சாப்பிட்டால், எந்த நோய் சரியாகும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அதிலும் இவை இதயத்திற்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இவற்றை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்துவிடும்.

தக்காளி

காய்கறிகளில் ஒன்றான தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இவை உடல் எடையை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள பீட்டா கரோட்டீன் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மையுடையது.

தர்பூசணி

தினமும் தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


மாதுளை

அனைவருக்குமே மாதுளை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும் என்று நன்கு தெரியும். அதிலும் இந்த பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

குருதிநெல்லி

சிவப்பு உணவுப் பொருட்களில் ஒன்றான குருதிநெல்லியில் அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் கே நிறைந்துள்ளன.

ஆப்பிள்

ஆப்பிளில் அதிக அளவில் ப்ளேவனாய்டு இருப்பதால், அவை உடலில் ஏற்படும் செல் அழிவைத் தடுத்துவிடும். மேலும் இவற்றை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும் வலுவைக் கொண்டது.

ராஸ்பெர்ரி

இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, பார்வை குறைபாடும் நீங்கும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியத்தோடு இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. எனவே இதனை டயட்டில் சேர்த்துக் கொண்டால், உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலிகள், கீழ்வாதம் மற்றும் இதய நோய் போன்றவற்றை சரிசெய்துவிடும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, குடலியக்கமும் நன்கு இயங்கும்.

செர்ரி

செர்ரியில் உடல் வலியை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், தூக்கமின்மை சரியாகும். அதிலும் இந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_17.html

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner