|
தமிழன் ரொம்ப பொறுமைசாலி தான் |
இன்று சரியான மழை ஆதலால் இரு சக்கர வாகனத்தை வீட்டிலேயே விட்டு விட்டு பஸ்ஸில் ஆபிஸ் போகலாம் என 116A kkd nagar இல் இருந்து highcourt செல்லும் பஸ்ஸில் ஏறினேன், பஸ் மின்ட்டை கடந்து cementry road rsrm ஆஸ்பத்திரி தாண்டி சென்று கொண்டிருந்தது .வழியில் ரோடு படு மோசம் மேடும் பள்ளமுமாக இருந்தது .பஸ் சற்று நிலை தடுமாறி பின் ஒரு வழியாக டிரைவர் இன் சாமர்த்தியத்தால் பள்ளத்தை தவிர்த்தது அப்பொழுது எனது பக்கத்துக்கு சீட்டில் அமர்திருந்த ஒருவர் புலம்பி கொண்டே வந்தது எனது கவனத்தை ஈர்த்தது .என்னவென்று கவனித்தேன். போடுங்கையா வோட்டு இரட்டை இலை யை பார்த்து என இரண்டு முறை சத்தமாக சொல்லிவிட்டு இருந்தாலும் தமிழன் ரோபா பொறுமைசாலி தான்யா பவர் கட் ,டிக்கெட் விலை ,பால்விலை என எல்லாத்தையும் ஏத்திட்டாங்க நல்ல ரோடு கூட கிடையாது அந்தம்மா சீட்ல உக்காந்து என்ன தான் பண்ணுதுன்னு தெரியல, எங்க கேரளா வுல எல்லாம் இந்த மாதிரி இருந்தா நேராக கோட்டையை முற்றுகையிடுவோம்.என்று விலாசிக்கொண்டிருந்தார் ,அக்கம் பக்கம் அனைவரும் ஆ வென அவர் பேசியதை பார்த்து கொண்டிருந்தனர் .மேயர் சுப்பிரமணி இருந்த போது மாநகராட்சி சுத்தமா இருந்துச்சி இப்போ யாரு மேயர் ன்னு கூட தெரியல. என்ன ஒரு சாபக்கேடோ இந்த தமிழனுக்கு.http://nikhiraagam.blogspot.com
nikhiraagam.blogspot.com/2012/10/blog-post_31.html
1 கருத்து:
என்ன கொடுமை சார் இது?
கருத்துரையிடுக