பல்சுவை உணவகம்

Blogger Widgets

09 அக்டோபர், 2012

To reduce of stress


மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மூலிகைச்செடிகள்!!!


இன்றைய காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க நிறைய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதனையும் பின்பற்றி மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர்.

ஏனெனில் மன அழுத்தம் இருப்பதால், உறவுகளில் பிரச்சனை, அலுவலகங்களில் பிரச்சனை மற்றும் உடலில் கூட பிரச்ச
னை ஏற்படுகின்றன. ஆகவே இப்போது அந்த மன அழுத்தத்தை குறைக்க ஒரு சில மூலிகைச்செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி, ரிலாக்ஸ் செய்கின்றன. இப்போது அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா!!!

ரோஸ்மேரி:
மூலிகை செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி, சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை மற்ற பயன்களுக்கும் பயன்படுகின்றன. அதிலும் மன அழுத்தத்தை குறைக்கப் பெரிதும் பயன்படுகிறது. மேலும் இவை உடல் தசைகளில் ஏற்படும் வலிகளுக்கும் சிறந்தது. மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால், மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடும்.

லாவண்டர்:
நிறைய இடங்களில் லாவண்டர் என்ற வார்த்தையை கேட்டிருப்போம். ஏனெனில் இந்த செடியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவற்றால் ஹார்மோன்களில் ஏற்படும் பாதிப்பு சரியாகும். மேலும் இவற்றால் செய்யப்படும் எண்ணெயை வைத்து உடலுக்கு மசாஜ் செய்தால், உடல் நன்றாக இருக்கும். மேலும் இதன் சுவையில் தயாரிக்கப்பட்டிருக்கும் டீயை குடித்தால், நிச்சயம் மன அழுத்தம் குறையும்.

கிரீன் டீ:
கிரீன் டீயின் நன்மைகள் நன்கு தெரியும். ஆனால் அந்த கிரீன் டீயை குடித்தால், மன அழுத்தம் குறையும் என்பது தெரியாது. உண்மையில் தினமும் 3-4 கப் கிரீன் டீ குடித்தால், மன அழுத்தம் குறையும். இது ஒரு சிறந்த நிவாரணி. மேலும் இவற்றில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையும் குறையும்.

சீமை சாமந்தி:
இந்த பூ ஒரு சிறந்த மூலிகைச்செடிகளில் ஒன்று. இது காய்ச்சலால் ஏற்படும் ஒருசில வலிகளை சரிசெய்யும் சிறந்த மருந்துவ குணமுள்ள பூ. உடல் வலி இருப்பவர்கள், இந்த பூக்களை அரைத்து, உடல் முழுவதும் தடவி, குளித்து வந்தால், உடல் வலி நீங்குவதோடு, அதன் மணத்தால் மன அழுத்தம் குறைந்தது, உடலும் அழகாகும்.

மணற்பூண்டு:
மணற்பூண்டு என்பது ஒருவித மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகைச் செடி. இதன் இலையை அரைத்து உடலுக்கு தடவினால், தசைகள் ரிலாக்ஸ் ஆவதோடு, மூளையும் நன்கு ரிலாக்ஸ் ஆகும். முக்கியமாக இது மனதில் ஏற்படும் தேவையில்லாத வலிகளை சரிசெய்துவிடும் அற்புதமான செடியும் கூட. ஏனெனில் அதன் நறுமணம் அத்தகைய மந்திரத் தன்மையுடையது.

ஆகவே மன அழுத்தம் ஏற்படும் போது, மேற்கூறிய மூலிகைச் செடிகளை பயன்படுத்தினால், மன அழுத்தம் குறைந்து, மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nalla maunthu

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner