உட்கட்டாசனம் : ஆம், இப்பொழுது நாம் பார்க்கபோகும் ஆசனம் ஆகும் இந்த ஆசனம் தொடக்க ஆசனமாகவும் வைத்துக்கொள்ளலாம்
தினமும் வாக்கிங் போறவரா ? நீங்கள்,கவலையை விடுங்க ! இந்த ஆசனத்த
தினமும் காலை மூன்று முறைசெஞ்சிங்கன்னா, கிட்டத்தட்டமூன்று
கிலோமீட்டர் தூரம் நீங்கள் வாக்கிங்சென்றால், என்ன பலனைபெறுவீர்களோ!!!
அதே அளவு பலனை சற்றும் குறைவில்லாமல் பெறுவீர்கள்.
கால் மூட்டு சம்மந்த பட்ட வியாதிகளுக்குஅதாவது மூட்டு வலி, கால்உளைச்சல்,வாதம்மற்றும் மூட்டுகளில் நீர் கோர்த்தல் போன்ற
வியாதிகளுக்கு சரியான நிவாரணி இந்த ஆசனம்.
எட்டு மணி அல்லது பத்து மணி நேரம் உங்கஅலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்துஇருப்பீர்கள்,ஒரு பயனும் உடம்பிற்க்கில்லை,ஆனால் இல்லாத ஒரு நாற்காலியில் மூன்றுநிமிடம் அமர்ந்து பாருங்கள் உங்கள் கால்
சம்மந்தபட்டஅத்தனையும் பறந்தோடிவிடும்.
குறிப்பாக பெண்களுக்கு இந்த ஆசனம் மிகுந்தபயனை தருகிறது. மாதவிடாய், தசை பிடிப்புபோன்றவற்றிற்கு நிவாரணம் தருகிறது.
சரி வாங்க நம்ம ஆசனத்துக்கு போவோம்!
நல்ல சுத்தமான விரிப்பை விரித்து ,கிழக்குதிசை அல்லது மேற்கு திசைபார்த்து நிற்கவும்.இரு கைகளையும் கூப்பிய நிலையில் உங்கள்
இஷ்டதெய்வத்தை நினைத்து கொள்ளுங்கள்.பின்னர் கைகளை மெதுவாக இறக்கி ஒருகாலை மட்டும் ஒரு அடிக்கு நகர்த்தி அதாவதுகால்களை ஒரு அடி இடைவெளி விட்டு விரித்து நிற்கவும்.
நம் பார்வையின் திசையில் இரு கைகளைதூக்கி நீட்டவும். பின்னர்பிருஷ்டம்
சற்றுஇறக்கி முதுகு தண்டை வளைக்காமல் நேராக நிமிர்த்தவும் .
சுவாசம் நிதானமாக உள் இழுத்துவெளி விடவும்.
ஏறக்குறைய இது,"இல்லாத நாற்காலியில் அமர்ந்திருப்பது" போன்ற
நிலை.இந்த நிலையில் ஒரு நிமிடம் இருந்தால் நிறைய நன்மைகள்.
இரண்டு நிமிடங்கள் இருந்தால் அதீத நன்மைகள் கிட்டும்.
இதில் இன்னுமொரு விஷயம்,இந்த
என்றால்!!! நாற்காலியில் அமர்ந்த
யோகநிலையின் போது கால் பாதங்கள்
தரையில்பதிந்தவாறு ஆசனம் செய்யவும்.
நன்கு பயின்றபின்கால் விரல்களால் நின்று
நிலை கொள்ளவும்.
எப்பொழுதும் யோகா செய்யும்முன் மற்றும் செய்த பின்னும் நரம்புகள்
அனைத்தையும் இலகுவாக வைத்து கொண்டு, கை கால்களை நன்றாக
உதறிக்கொள்ளவும்.
மீண்டும் அடுத்த ஆசனத்தில் சந்திப்போம்.அதற்க்குமுன் ஒரு முத்திரையை பதிக்கவும்.
நன்றி!!!
http://tripleclicks.com/12049858/detail.php?item=144953
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக