வணக்கம் அன்பர்களே!!!
என்ன அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடி கலைத்து போயிருப்பிர்கள், நடுவில் யோகா வுக்கான பதிவை எழுத முடியாமல் அலுவல் பனி என்னை தடுத்துக் கொண்டே இருந்தது. பின்பும் இன்று ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று, ஒரு முயற்சி எடுத்து இந்த பதிவை எழுதுகிறேன்.
இன்று நாம் பழக இருப்பது "புஜங்காசனம்" புஜங்கம் என்றால் வட மொழியில் பாம்பு என்று அர்த்தம் ஆகிறது. ஆகையால் இதை தமிழில் பாம்பு ஆசனம் என்று கூறப் படுகிறது
இந்த ஆசனம் நமக்கு பரிச்சயமானது தான் ஏனெனில் நாம் ஏற்கெனவே பார்த்தோமே முதல் ஆசனமாக "சூரிய நமஸ்காரம்" இதில் ஏழாம் நிலை தான் இந்த புஜங்காசனம்.
சரி முதலில் இதன் மகத்துவம் மற்றும் மருத்துவ பலன்களை பார்த்துவிடுவோம். நான் ஏற்கெனவே சொன்னது போல மிக பொறுமையாக மட்டுமே செய்ய வேண்டிய ஆசனம் இது பரபரப்பாக செய்தால் உடம்பு மற்றும் மனசோர்வு இரண்டையும் தவிர வேறெந்த பலனையும் அனுபவிக்க முடியாது.
இந்த ஆசனம் செய்யும் போது வயிற்று பகுதி நன்றாக இழுக்க படுவதால் தசை பகுதிகளில் ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. முதுகெலும்பு மற்றும் மார்பு விரிந்து விலா எலும்புகளில் பலம் பெற செய்கிறது.
இந்த ஆசனத்தை ஆஸ்துமா நோயாளிகளுக்கு, மருத்துவர்களால் பரிந்துரைக்க படுவதாகிறது.
பெண்களுக்கான கர்ப்பப்பை கோளாறுகளை விரைவில் குணமாக்க கூடியது இந்த ஆசனம். மேலும் இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் வெள்ளை படுதல், மாதவிடாய் தள்ளி போவது போன்ற உபாதைகளில் இருந்து மீளலாம்.
வாங்க நம்ம ஆசனத்தின் செய்முறை பார்ப்போம்.
கிழக்கு நோக்கிய திசையில், சுத்தமான விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் நிற்கவும் நிதானமான சுவாசத்தில்,பின் மெதுவாக மண்டியிட்டு அப்படியே குப்புற படுத்த நிலைக்கு வரவும்.உள்ளங்கைகள் தரையில் பதிந்தும்,நிதானமான சுவாசத்தில் நாசியால் தரையை முகர்ந்த நிலையில் சில வினாடிகள் இருக்கவும்.நீட்டிய கால்களை ஓன்று சேர்ந்த வாறு வைத்து கொண்டு மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக் கொள்ளவும்.
தொப்புளுக்கு கீழ் பகுதி முழுவதும் தரையில் பதிந்தவாறும்,தொப்புளுக்கு மேல் பகுதியான வயிறு மற்றும் முதுகு தண்டை பின்னோக்கி வளைக்கவும், பார்வை வானத்தை நோக்கி இருக்கவும் இரண்டு அல்லது மூன்று வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
மெதுவாக சுவாசத்தை வெளியில் விட்டவாறு, வளைத்த முதுகு தண்டை நேராக்கி தொப்புளுக்கு மேல் பகுதியான அனைத்தையும் தரையில் பதியும் படி இறக்கவும். பின்னர் நாசியால் தரையை முகர்ந்த நிலைக்கு வரவும் சில வினாடிகள் ஆசுவாச படுத்திக்கொண்டு மீண்டும் தொடரவும். இப்படியாக மூன்று அல்லது ஆறு முறை தினசரி செய்து வந்தால் நற்பயனை அனுபவிக்க முடியும்.
படிச்சிட்டு சும்மா போகாம, ஒரு ஓட்டு மட்டும் போட்டு போகலாமே.!!!
நன்றி!!!

nikhiraagam.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக