பல்சுவை உணவகம்

Blogger Widgets

19 நவம்பர், 2012

கவலைகளை நீக்கும் உணவுகள்

கவலைகளை நீக்கும் உணவுகள்

எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோ
டு இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

நேர்மறை எண்ணங்கள்

எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம் என்கிறார் ஆஸ்திரிய மனோதத்துவ மருத்துவரான ஆல்பிசட் ஆட்லர். இதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

கவலைப்படாதீர்கள்

கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். இதுவே நோய்களை குணமாக்கும் மருந்து என்கிறார் ஆல்பிசட் ஆட்லர். இதே நம்பிக்கையுடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கவலைகளை நீக்கும் உணவுகள்

நோய் பாதிப்பிற்கு ஆளானவர்கள் ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.

வாழைப்பழம், சீஸ், பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கோபத்தை குறைக்கும் பி வைட்டமின்

திடீரென்று ஒருவருக்கு கோபம் அதிகமாவது கூட கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி குறைந்தாலும் எளிதில் கோபம் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

உணர்ச்சிக் கொந்தளிப்பால் சிலருக்கு உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அடங்கிய பொருட்களை உணவில் சேர்க்கவும்.

கீரை அவசியம்

மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.

கவலையை முறியடிக்கும் உணவுகளை தினசரி உட்கொண்டால் மன அமைதி கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும் என்கின்றனர் நிபுணர்கள்.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner