காவிரிநீர், தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.
காவிரி நீருக்காக குடுமிபிடி சண்டையில் இரு மாநில அரசுகளும்
உச்ச நீதி மன்றத்தை அணுகின.
இதையடுத்து இரு மாநில அரசும் தம் தம் தேவைகளை அறிக்கையாக
தாக்கல் செய்துள்ள நிலையில்
இன்று காவிரி நீர் பங்களிப்பு தொடர்பாக விசாரணை இன்று நடை
பெற்றது. இதில் பேசிய நீதிபதி,ஏற்கெனவே இது போன்ற ஒரு நிலை
ஏற்பட்ட போது ,கர்நாடக அரசு 20 டிஎம்சி தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டது .இப்போது அதே போன்று உத்தரவு பிறப்பித்தால் கர்நாடக அரசின் நிலை என்ன? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கர்நாடக அரசு வழக்கறிஞர்,கர்நாடக நிபுணர் குழு செய்த ஆய்வின் படி எங்களுக்கு தேவையான தண்ணீர் தான் எங்கள் வசம்
இருக்கிறது என ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம், தற்போது தண்ணீர் திறக்க முடியாது, இது பற்றி ஜனவரியில் மீண்டும் பேசலாம் என்று கர்நாடக
வழக்கறிஞர் வாதாடினார்.
தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், காவிரி ஆணையம் வழங்கிய
தீர்ப்பின்படி வறட்சியான காலத்திற்கு தமிழகத்திற்கு 63 டிஎம்சி.தண்ணீர்
இதுவரை வந்திருக்க வேண்டும்.இப்போது கர்நாடக அணையில் 37 டிஎம்சி
தண்ணீர் இருப்பு உள்ளது.இதில் 30 டிஎம்சி தண்ணீர் கேட்கிறோம்.
இதற்கு ஜனவரி யில் பேச்சுவார்த்தை நடத்த கோரும் கர்நாடக த்தின் வாதம்
ஏற்கத்தக்கதல்ல. அடுத்த 15 தினங்களுக்குள் 30 டிஎம்சி தண்ணீர் வராவிட்டால்
டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிடும்
என்றார்.
இரு தரப்பிலும் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்தார்.
1 கருத்து:
Thamilagaththirkku neethi thamathamaagathaan kidaikkum pol
கருத்துரையிடுக