வஞ்சித்தது கர்நாடகம் மட்டுமா?மத்திய அரசும் தான்!
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ,காவிரி பாசன விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் உள்ள விசாயிகளின் வாழ்க்கை
கேள்விக்குறியாகி உள்ளது. கர்நாடக அரசின் வஞ்சகமான போக்கால்,
தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையான காவிரி நீரை,கர்நாடக அரசு அராஜக
முறையில் தடுப்பது,விவசாயிகள் விவசாயத்தை இழந்து,மீளா நெருக்கடி
நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்.
நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகதிற்கு கிடைத்திருக்க கூடிய நீரை தர
கர்நாடக அரசு மறுப்பதாலும்,போதிய மழை இல்லாததாலும்,ஆண்டு தோறும்
ஜூன் 12 ல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு செப்டம்பர்
17 ல் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம்,கீழ்வேளூர் ஒன்றியத்தை சேர்ந்த,கூரத்தான்குடி ராஜாங்கம்
பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை! இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மயிலாடுதுறை முருகையன்,நடவேட்டியம் ராஜகோபால் ஆகிய இரு விவசாயிகளின் தற்கொலை! எனும் செய்தி நம்மை பேரிடியாக தாக்குகிறது
கடன்மேல் கடன்பட்டு, பயிர் செய்த விவசாயிகள் வழி தெரியாமல் கை
பிசைந்து நிற்பது மட்டுமின்றி, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப் படும் செய்தி நம் நெஞ்சை பிளக்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை விவசாயிகளுக்கா இந்த நிலை?
சோழ நாடு சோறுடைத்து: என புகழ் பெற்ற சோழ மண்டலம் இப்படியா துயர்
சூழ்ந்து நிற்பது;
நடுவர்மன்ற தீர்ப்பின்படி,தமிழகதிற்கு கிடைக்க வேண்டிய 52.5 டிஎம்சி நீரை,
கர்நாடகம் வழங்கிட உத்தரவிடவேண்டும் என காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. கர்நாடகம் பொய்யான
காரணத்தை கூறி தண்ணீர் தர மறுத்து விட்டது.
இரு மாநிலத்தின் நிலைமையை உணர்ந்து கர்நாடகம், தமிழகத்திற்கு நவ 15 முதல் 30 வரை 4.8 டிஎம்சி.தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவிட்டது. அதையும் வழங்க மறுத்தது.தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடியது ,இரு மாநில முதல்வர்களும் சந்தித்து காவிரி பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தது.
இதன்படி தமிழக முதல்வர் நவ 29ஆம் தேதி பெங்களூர் சென்று, கர்நாடக முதல்வரை சந்தித்து சம்பா பயிரை காப்பாற்ற 30 டிஎம்சி .நீர் தர வேண்டுகோள் விடுத்தார் .ஆனால் ஒரு சொட்டு நீரும் தர முடியாது என
கர்நாடக முதல்வர் கைவிரித்தார்.
கர்நாடக அரசை பணிய வைத்து தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு. தமிழகதிற்கு துரோகம் விளைத்து,அதன் போக்கிலே
வேடிக்கை பார்க்கிறது. தமிழகம் உச்சநீதி மன்றத்தை நாடியதால் மட்டுமே
நீதிமன்றத்தின் ஆணை படி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முன் வந்தது.
ஆனால் காவிரி கண்காணிப்பு ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய
அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
ஆகவே மத்திய அரசை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு கோரியும், கருகும் சம்பா பயிரை காப்பாற்ற
நடவடிக்கை கோரியும், காவிரி பாசன பகுதிகளில் விவசாய சங்கங்கள் நடத்த
இருக்கும் அறப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. முழு ஆதரவை வழங்குகிறது.
என்று தனது அறிக்கையில் வைகோ கூறி உள்ளார் .
http://nikhiraagam.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக