இலச்சியத்தை தேடி,,, |
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
ஒவ்வொரு ஜீவ ராசிகளும் இந்த மண்ணை அடைந்ததும்,வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி இலச்சியத்தை அடைய வேண்டும் என்கிற காரணமே ,இருப்பினும், ஆறறிவு பெற்ற மனிதன் வரம் பெற்ற இந்த வாழ்க்கையை வாழ்வதர்க்குள் எத்தனை எத்தனை போராட்டங்கள்,ஏமாற்றங்கள்.
அத்தனையும் தாண்டினால் தான் நாம் இலச்சியத்தை அடைய முடியும்.
அது சரி பல கோடி விந்தணுக்களின் ஓட்டத்தில், முதல் ஆளாக முண்டியடித்து,கருவை அடைந்து பத்து மாதங்கள் அமைதி காத்து,பின் முழு உருவாக இந்த மண்ணை அடைந்து ஏமாற்றங்களுக்கு பயந்து. பாதியில் உயிரை மாய்த்து கொள்வது எத்தனை கோமாளித்தனமானது.
ஆகையால் வாழ்க்கையில் ஒவொருவரும் இலச்சியத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்
உங்கள் இலச்சியத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி?
நமத இலட்சியம் நமது திறமைக்கும் தகுதிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
நமக்குத் தொடர்பே இல்லாத துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
இந்த இரண்டு கருத்துக்களையும் நம் இலட்சியத் தேர்வுக்கு அடிப்படை விதிகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கை
நாம் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்தை நாம் அடைந்துவிட முடியும் என்பதில் முதலில் நமக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும். அந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்க வேண்டும். நம் உள்ளுணர்வு சொல்லும் இந்த நம்பிக்கையே அடிப்படை மூலதனமாகும். இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் பிறகு எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் நம் இலட்சியத்தை நாம் நிறைவேற்றி விடலாம். ஒரு வயதானவர் பழனிமலை மீது ஏறுகிறார். அவர் சென்று அடைவாரா என்பதில் நமக்கு சந்தேகமாக இருக்கிறது அவ்வளவு தளர்ச்சி. ஆனால் அவர் உள்ளத்தில் அசாத்தியமான நம்பிக்கை. நான் நடந்தே சென்று உச்சியை அடைவேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும்போது நமக்கும் கூட நம்பிக்கை பிறக்கிறது. அவர் உறுதியாக உச்சியை அடைந்துவிடுவார் என்று அத்தகைய நம்பிக்கை நம் முன் பிறக்க வேண்டும். அதை நாம் வளர்க்க வேண்டும்.
எது முக்கியம்
இலட்சியத்தை நம்பினால் மட்டும் போதாது. நம் வாழ்வில் எது முக்கியம்? பதவி உயர்வா? பொருளாதாரம் சேர்ப்பதா? புகழை அடைவதா? குடும்பத்தை மேன்மைக்குக் கொண்டு வருவதா? நாட்டுக்கு உழைப்பதா? அல்லது நம் உடல் நலனுக்கு முதன்மை கொடுப்பதா? இப்படி ஒரு மனிதருக்கு பல்வேறு பணிகள் இருக்கின்றன. அதுவே உயர்ந்த எல்லையை அடையும்போது இலட்சியமாகக் கருதப்பட்டு விடுகின்றன. ஒரு மனிதனுக்கு எல்லாம் தேவைதான். ஆனால் இத்தனையும் எடுத்துச் சுமந்து கொண்டு ஒருவன் நெடுந்தூரம் நடக்க முடியாது. அதனால் வாழ்வில் அவரவர்க்கு எது முக்கியம் எது முதன்மையானது என்று அதை மட்டும் தேர்ந்து கொண்டு மற்றவைகளுக்கு இரண்டாவது, மூன்றாவது நான்காவது இடம் கொடுத்து வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரச் சிக்கல் உள்ளவர்கள் அதற்கு முதன்மை கொடுத்து அதனைச் சேர்க்க வேண்டும். எல்லா வசதிகளும் இருக்கின்றவர்கள் தங்களால் முடியாத படிப்பை தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும். தேசத் தொண்டே முதன்மை என்று கருதுகின்றவர்கள் தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் காந்தி ஆக வேண்டுமா? அல்லது நேரு ஆக வேண்டுமா? அல்லது டாடா பிர்லா ஆக வேண்டுமா? முடிவு செய்யுங்கள் முதன்மை கொடுத்துச் செயல்படுங்கள். அறிவு இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினம்.
தடைகளை கணக்கிடுங்கள்
உங்கள் இலட்சியப் பாதையில் விரைந்து நடக்க முடியாதபடி தடையாக இருக்கின்றவற்றை பட்டியலிட்டு வரிசைப்படுத்துங்கள். ஒட்டு மொத்தமாக எண்ணிப்பார்த்தால் இமயமலை அளவு தடை இருப்பது போல் தோன்றலாம். ஆனால் எழுதிப்பார்த்தால் 4, 5 எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும். பிறகு ஒவ்வொன்றிற்கும் விடை கண்டு விடலாம். சிலவற்றிற்கு தக்கவரை நாடி சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வளர்த்தவர்கள் முன்னேறியவர்கள் இந்தமுறையைப் பின்பற்றுகிறார்கள் வெற்றி பெறுகிறார்கள்.
வெற்றி நமதே !!!!
நன்றி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக