பல்சுவை உணவகம்

Blogger Widgets

20 நவம்பர், 2012

"யோகா எனது பார்வையில்"


  யோகா  எனது பார்வையில்.....

அன்பர்களே ,
  "எனது பார்வையில் யோகா" என்ற தலைப்பில் எழுத வைத்த இறைவனுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்து கொண்டு தொடர்கிறேன்,
 யோகா நான் 26 வயதில் கற்றுக்  கொண்டேன்.15 ஆசனங்கள் வரை எனது குரு எனக்கு கற்றுக் கொடுத்திருகிறார் அதை தங்களுக்கும் பயன் படும் விதமாக எளிய நடைமுறையில் சமர்பிக்கிறேன்.
சரி யோகா செய்தால் என்னதான் கிடைக்குது.என்று கேட்பது புரியுது
நான் யோகா கற்று ஒரு வருஷம் மட்டுமே தொடர்ந்து செய்து வந்தேன் ஆகையால் முழுமையான பலனை என்னால் அனுபவிக்க முடியவில்லை.இருப்பினும் நான் மிகுந்த பரவசநிலை அடைந்தேன் என்பதை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.என்னோடு யோகா கற்ற ஒருவர் தொடர்ந்து ஆறு வருஷங்கள் யோகா செய்து மிக உயர் நிலையை அடைந்தார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ? யோகா மிகவும் பழமை வாய்ந்த கலை கிட்டத்தட்ட 5000 வருஷங்கள் பழமையானது. பகவத் கீதையில் போர்த் துறையில் மன முரண்பாட்டை தீர்க்க,அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
கொடுத்த வெளிபாடு தான் இந்த யோகா என சொல்லப்படுகிறது.இவ்வளவு ஏன் சிகிச்சைக்காகவும் யோகா பயன்படுகிறது.ஆக!!! மனதை ஒரு முக படுத்த யோகா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.வாழ்க்கையில் ஒரு அங்கத்தை பிரதிபலிக்கும்.உங்கள் உள் அமைதியை தேட உங்களை ஊக்குவிக்கும்.ஒரு ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் ,இன்னும் முழுமையான வாழ்கையை வாழ,உங்கள் வழியில் உங்களை வழி நடத்த உந்தபடுகிறது.இதில்பத்மாசனத்தில் அமர்ந்து  மூச்சு பயிற்சி தியானத்தில் என்னுடைய அனுபவம் இருக்கிறதே! அய்யோ அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.என்னுடைய மனம் என்னுடன் பேசும் ஒரு பிரம்மையை உணர்ந்தேன் .
நான் நேரம் கிடைக்கும் போது அவ்வபோது செய்து வருகிறேன்.இதை நீங்கள் தொடர்ச்சியாக செய்து பேரானந்தம் பெறுக,அந்த பெருமையின் பங்கை எனக்கும் தறுக.
சரி இப்போ யோகா  செய்யும்முன் எந்த நிலையில் உடலையும் மனதையும் வைத்திருக்க வேண்டும் என்பதை பாப்போம்.
யோகா செய்தால் அசைவம் உண்ணக்கூடாது என்பது அடிப்படை
யோகா செய்யும்முன் தன்ணீர் கூட குடிக்க கூடாது வயிற்றை காலியாக வைத்திருக்க வேண்டும்.
யோகா செய்து முடித்து நிறைய தன்ணீர் அருந்தலாம்
உணவு உண்டவுடன் யோகா செய்ய கூடாது, மூன்று மணி நேரம் கழித்தே செய்ய  வேண்டும்
மது,மாது, புகை என எந்த ஒரு போதை பழக்கமும் இருக்க கூடாது
வேளையோடும் அளவோடும் உணவு  உண்ணவேண்டும்.
அன்பர்களே யோகா வை பற்றி பேச கடலளவு விஷயங்கள் உண்டு
எனது நேரமின்மையின் காரணமாக இத்துடன் முடித்து அடுத்த பகுதியில் இருந்து நேரடியாக ஆசனத்தில் அமருவோம்.
நன்றி !!!
சற்று சிரமம் பார்க்காமல் கருத்துரை இடலாமே...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nalla vishayam thaane,thaaraalamaa seiyalaam.

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner