பல்சுவை உணவகம்

Blogger Widgets

24 டிசம்பர், 2012

யோகா எனது பார்வையில் "ஆசனம் 3" உஷ்த்ராசனம்


யோகா எனது பார்வையில் "ஆசனம்  3"உஷ்த்ராசனம்

அன்பர்களே தயார் ஆகிவிட்டீர்களா!
     வாருங்கள்    இன்று    நாம்   பார்க்கபோகும்       ஆசனம் "உஷ்த்ராசனம்"



இது ஒட்டகநிலை என்று அர்த்தமாகிறது.உஷ்த்   என்றால்    சமஸ்கிருதத்தில்
ஒட்டகம்     என்று  பொருள் படுகிறது.   இந்த ஆசனம் மிக  கவனமாக  செய்ய
வேண்டிய ஆசனம்.    கடமைக்கு    யோகா  செய்தோம்!!!முடித்தோம்  என்றும்
இருக்கிற டென்ஷனை  எல்லாம் இதில் காட்டி  அரக்க பறக்க செய்வது  கூடாது.நான்  ஏற்கெனவே  கூறியது  போல்  நிதானம்  மிக  அவசியம்.

இதன் மகத்துவம் தான் என்ன?

செரிமானம்,சுவாசம்,நாளமில்லா சுரப்பி,எலும்பு போன்ற சுழற்சி அமைப்புகளை மேம்படுத்துகிறது.இதற்க்கெல்லாம் மேலாக கண் பார்வையை அதிகரிக்கிறது.

இதன் மருத்துவம்!!!
ஆஸ்துமா,மூச்சுகுளாய் அழற்சி ,நீரிழிவு,தைராய்டு மற்றும் குரல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மருத்துவர்களே இந்த ஆசனத்தை பரிந்துரைகின்றனர்.


தவிர்க்க வேண்டியவை என்ன?

கடுமையான முதுகு வலி, கழுத்து வலி,  குறைந்த,உயர் இரத்த அழுத்தம், தலை வலி மற்றும் வாயிற்று போக்கு இருந்தால் தயவு செய்து செய்ய வேண்டாம்.








சரி இப்போ செய்முறையை பார்ப்போம்!!!


  1. விரிப்பை தரையில் விரித்து கிழக்கு நோக்கி கால்களை நீட்டி அமருங்கள்.

     2.   ஒரே பக்கமாக கால்கள்  இரண்டையும் மடக்கி உங்கள் கணுக்காலில் பிருஷ்டத்தை பொருத்தி  மண்டியிட்டு அமர்ந்து   கைகளை தொடைகளில் பதிய வைக்கவும்.


  3. பின்னர்  மெதுவாக கைகளால் இடுப்பை பிடித்து முதுகு தண்டை வளைக்கவும்.மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தவும்.

    4.உள்ளங்கைகளை  கால் பாதங்களில் சரியாக பொருத்தி,வயிற்று பகுதியை மேல் நோக்கி உயர்த்தவும்.கழுத்து பகுதியை நன்றாக வளைத்து மேல்நோக்கிய பார்வை இருக்கவும்.  இந்த நிலையில் 30 வினாடிகள் நிலை நிறுத்தவும்

இந்த நிலையில் வயிற்று பகுதியை எந்த அளவுக்கு மேல்நோக்கி அதாவது முதுகு தண்டை நன்றாக வலைக்கிரீர்களோ!!! அந்த அளவுக்கு கொழுப்பு சீக்கிரமாக கரைந்து விடும். நான் இந்த ஆசனம் பயிலும் போது ஒரே வாரத்தில் எனது தொப்பையை கரைத்தேன்.

5.பின்னர் மெதுவாக  சுவாசத்தை வெளியில் விட்டு தூக்கிய வயிற்று பகுதியை கீழ் இறக்கி பழைய நிலையில்  பிருஷ்டத்தை கணுக்காலில் பொருத்தி, உள்ளங்கைகளை  எடுத்து  தொடைகளில் பதிய வைக்கவும்.

இப்படியாக காலைவேளை  மட்டும்  தினசரியாக மூன்று முறை செய்து பழகலாம்! நலம் பெறலாம்.


சரி வழக்கமானதுதான், பிடித்து இருந்தால் தவறாமல் முத்திரை பதிக்கவும்!
இல்லையெனில் கருத்துரை இடவும்.



நன்றி!!!




http://tripleclicks.com/12049858/detail.php?item=38631http://tripleclicks.com/12049858/detail.php?item=38631

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner