பல்சுவை உணவகம்

Blogger Widgets

18 ஜனவரி, 2013

இனிவரும் இளைய சமுதாயம் காக்கப்பட வேண்டும்








ஒருவனின் கவிதை அல்ல :



முதல்வர் அவர்களே....

ஆன்மீகம் தேட வேண்டாம் 
அன்னதானம் போட வேண்டாம் 
மது கடைகளை மூடி பாருங்கள் -அந்த 
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் 


இருப்பதை வைத்து 
சிறப்பாய் வாழ்வோம் 
குடிப்பதை வைத்து   
என்ன வளர்ச்சி?
வேரிலே விசமென்றால் 
ஏது மலர்ச்சி ?


ஊற்றில் விடத்தை கலந்து 
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு 
வேலியை கட்டி என்ன பயன் ?


மனமும் உடலும் கெடுத்தபின் 
மாநிலம் வளர்ச்சி,என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு 
குடத்தை வாங்கி என்ன பயன் ?


சமுதாயமே சீரழிந்த பின் 
சாலையும் ஆலையும் எதற்கு?

தமிழகத்தில் எல்லா சாலைகளும் 
சுடுகாடு நோக்கி போகிறது.
உடலும் மனமும் போதையிலே 
நாடே வீணாய் ஆகிறது 


மாநிலம்,
வசதியாக இல்லையெனும் 
பரவாயில்லை -தமிழினம் 
நிம்மதியாக வாழ 
வழி  காட்டுங்கள் ..

ஒருவனின் கவிதை அல்ல 
ஒரு இனத்தின் அழுகை!!!

-வை .நடராஜன் 

இது கண்டிப்பாக நான் எழுதிய கவிதை இல்லை, எனது நண்பரின் facebook இல் படித்தது.  கவிதை அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை என்றாலும்,அதில் உள்ள விஷயங்கள் அனைத்தும், மனதை உறுத்து வதை என்னால் மறுக்கமுடியவில்லை.

இன்னும் எத்தனை எத்தனையோ கனவுகளையும்,கடன்களையும்  சுமந்து கொண்டு.வழி தவறிய இளைய சமுதாயத்தினரை இழந்து, நாட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் தான் என்ன?


 நாம்  வாகனம் வேகமாக ஓட்டி  கொண்டிருக்கும் வேளையில் வேகத்தடை குறுக்கிடும் போது, பத்து அடிக்கும்  முன்னாள் வாகனத்தின் வேகத்தை குறைப்பது தான் முறை ஆகும்.வேகத்தை குறைக்காத பச்சத்தில்! வாகனம் நிலை   தடுமாறி  செல்ல வேண்டிய  இலக்கை தவறவிடும்.

மக்களை மடையர்களாக்கும் மது எனும் அரக்கனை துறக்கவும், சமுதாய சீர்கேடுகளை கலைக்கவும்,இனி வரும் இளைய சமுதாயத்தினரையாவது  மீட்டு நல் வழி படுத்தவும்,

தமிழக அரசு  உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை காக்க முடியும் .என்பது தான் உண்மையான  உண்மை.

விழிப்புணர்வு அடையும் வரை தொடரும் எனது பதிவு.

நன்றி!!!



கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...
Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner