ஆசனம் 1 சூரிய நமஸ்காரம்
அன்பர்களே!
தாமதத்திற்கு மன்னிக்கவும் வேலை பழு காரணமாகவே பதிவு தாமதமாகியது. அனைவரும் தயாரா? சரி முதல் ஆசனம் சூரிய நமஸ்காரம்
ஏற்கனவே நான் சொன்னது போல் வயிற்றை காலியாக வச்சிருக்கிங்களா
நல்ல காற்றோட்டம் மிகுந்த பகுதியை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
எப்பவுமே யோகா வெறும் தரையில் செய்யக்கூடாது.தரையில் முடிந்த அளவு
காட்டன் துணியை விரித்து தான் செய்ய வேண்டும்.முடியாத பட்சத்தில் ஏதோ
ஒரு துணியை விரிக்கலாம்.ஆனால் அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்
எப்பொழுதும் சூரியஒளியில் யோகா செய்வது சிறந்தது என்பர்! அதேபோல்
கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கிய பார்வையில் ஆசனம் அமர
வேண்டும்.
ஆசனத்தில் அமரும் முன் எந்தவித பரபரப்புக்கும் இடம் தராமல் அமைதி மட்டுமே மனதில் நிலைத்திருக்க வேண்டும்! வேக வேகமாக ஆசனம்(உடற்பயிற்சி போல் ) செய்வது கூடாது,ஒரு ஒரு ஆசனத்தின் போதும் போதுமான இடைவெளி மற்றும் நிதானமும் தேவை.
ஒரு ஒரு ஆசனத்தின் போதும் சுவாசம் கவனிக்கபடவேண்டியவை அவசியம்.
முதல் முறை யோகா பயிலும் போது, ஒரு ஆசனம் மூன்று முறை செய்தால் போதுமானது.அதாவது காலை மூன்று முறை மாலை மூன்று முறை செய்யலாம்.
மிக எளிமையான ஆசனங்கள் மட்டுமே இங்கே நாம் பார்க்க போகிறோம்,
ஆகையால் யாருக்கும் பதட்டம் வேண்டாம்.
முதல் நிலை
கிழக்கு திசை நோக்கி கைகூப்பி நின்று
கண்களை மூடி நிதானமான சுவாசத்தில்
இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து
கொள்ளுங்கள்.
இரண்டாம் நிலை
கைகளை மேலே உயர்த்தி மெதுவாக சுவாசத்தை உள் இழுத்து முதுகு தண்டை லேசாக பின்னால் வளைத்த
நிலையில் இருக்கவும்.அதாவது நிறைய பேருக்கு இந்த இடத்தில்
தான் குழப்பம் வரும்!இப்படியே எவ்ளோ நேரம் தான் நிக்கிறது ?புதியவர் என்றால் 5நொடிகள் இதே நிலையில் நிற்கலாம்.
மூன்றாம் நிலை
கையை தூக்கிய நிலையில் இருந்து
மெதுவாக சுவாசத்தை வெளியில்
விட்டவாறு கால் முட்டி மடங்காமல்
முன்னால் குனிந்து,உங்கள் கால்
விரல்களில் கைவிரல்கலால் பதியவும்.
நான்காம் நிலை
மெதுவாக இடது காலை நீட்டியும்,
வலது கால் மடக்கியும்.கைகள்
இரண்டும் தரையில் பதித்து,கழுத்தை
நேராக வைத்து சுவாசத்தை உள் இழுத்து நிறுத்தவும்.
ஐந்தாம் நிலை
நீட்டிய இடது காலோடு வலது காலையும் நீட்டவும்,கைகள் தரையில் பதிந்த நிலையிலேயே,
சுவாசத்தை வெளியில் விட்டு
பின் மெதுவாக இடுப்பை மேலே தூக்கிய நிலையில் நிறுத்தவும்.
ஆறாம் நிலை
சுவாசத்தை வெளியில் விட்ட நிலையில்,இடுப்பை கீழ் இறக்கி, நாசி,வயிற்று பகுதி மற்றும்கால் முட்டி நிலத்தில் படுமாறு தரையில் |
வினாடிகள் இருந்தால் போதுமானது.
ஏழாம் நிலை
கால்கள் இருந்த நிலையில் இருக்க
சுவாசத்தை மெதுவாக உள்ளேஇழுத்து
முதுகு தண்டைபின்னோக்கிவளைத்து
முகம் மற்றும் வானத்தைநோக்கிய
பார்வையில் இருக்கவும்.
எட்டாம் நிலை
சுவாசத்தை வெளியில் விட்டவாறு
கைகள் தரையில் பதிந்த நிலையிலேயே இடுப்பை மேலே
தூக்கிய நிலையில் நிறுத்தவும்!
இனி இந்த நிலையில் இருந்து படிபடியாக ஆரம்ப
நிலைக்கு திரும்ப வேண்டும்.
ஒன்பதாவது நிலை
சுவாசத்தை உள்ளிழுத்து மேலே
பார்த்தநான்காம் நிலை போல்
கைகள் தரையில் பதிந்து இம்முறை
வலது காலை பின்னால் நீட்டியும்
இடது காலை மடக்கிய நிலையிலும்
இருக்கவும்.
பத்தாவது நிலை
சுவாசத்தை மெதுவாக வெளியில்
விட்டு இடுப்பை மேலே உயர்த்தி
மேலே பார்த்த மூன்றாவது நிலை
போல் கைகள் தரையில் பதிந்திருக்க
கால்களின் முட்டி மடங்க கூடாது.
பதினொன்றாவது நிலை
கைகளை மேலே உயர்த்தி சுவாசம் உள் இழுத்து மேலே பார்த்தஇரண்டாம்
நிலைபோல் முதுகுதண்டைபின்னால்
வளைக்கவும்.
பனிரெண்டாம் நிலை
சுவாசத்தை வெளியில் விட்டு தூக்கிய
கைகளை மெதுவாக இறக்கி மேலே
பார்த்த ஒன்றாம் நிலைபோல்
கைகளை கூப்பி சீரான சுவாசத்தில்
நிற்கவும்.
யோகா செய்வதற்கு புதியவரா நீங்கள்? ஒன்றும் பயம் இல்லை,நான்
சொல்கிற இந்த பனிரெண்டு நிலைகளும் காலை மூன்று முறை, மாலை
மூன்று முறைகளும் செய்யலாம் எந்த காரணம் கொண்டும் உடற்பயிற்சி போல் கடுமையான பயிற்சியாக செய்ய வேண்டாம்.மனதை லேசாக
வைத்து முயற்சியை தொடங்கவும்.
கடைசியா ஒன்னே ஒன்னு சொல்றேன்................
உங்க முத்திரை ஒன்ன குத்திருங்களேன்!!!
1 கருத்து:
good post! carry on with your work
கருத்துரையிடுக